136 கோடி ரூபா அபராதம் செலுத்தும் கூகுள் நிறுவனம்?

Monday, February 12th, 2018

கூகுள் நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் 136 கோடி இந்திய ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விமான பயனர்கள் கூகுளில் தேடும்போது அது தன்னிச்சையாக, கூகுளின் விமானங்கள் குறித்த சேவைக்கு செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் தேடலில் மேற்கொண்ட பக்கச் சார்பின் காரணமாக, போட்டி நிறுவனங்களுக்கான வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு, குறித்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, 6 நாட்களில் அந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டுமென கூகுள் நிறுவனத்துக்கு இந்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது