100,000 டொலர்களை வெல்ல அரிய வாய்ப்பு!

Friday, September 22nd, 2017

விண்வெளி ஆய்வு மையமான நாசா வெகுமதி ஒன்றினை அறிவித்துள்ளது. தூசுப் படலங்களை கண்டறியக்கூடிய சென்சாரை வடிவமைப்பவர்களுக்கு சுமார் 100,000 டொலர்கள் பெறுமதியாக வழங்க முன்வந்துள்ளது.

குறித்த சென்சாரானது குறைந்த எடை மற்றும் குறைந்த விலை கொண்டதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெற்றிகரமாக உருவாக்கப்படும் சென்சாரானது விண்வெளி வீரர்கள் சுவாசிக்கும் காற்றில் தூசுப் படலங்கள் கலந்திருப்பது தொடர்பில் எச்சரிக்கை விடுப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.இதில் பங்குபற்றுவதற்கு எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதிக்கு முன்னர் பதிவினை மேற்கொள்ள வேண்டும்.அத்துடன் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சென்சாரினை ஒப்படைக்க வேண்டும்.இணையத்தள முகவரி https://www.earthspaceairprize.org/