100 மடங்கு அதிவேக இண்டர்நெட் சேவையுடன் புதிய வைபை!

தொழில்நுட்ப உலகில் தற்போது உள்ள வைபைக்களின் வேகத்தை விட 100 மடங்கு அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் புதிய வைபை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் ஈந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழக (Eindhoven University of Technology) ஆராய்ச்சியாளர்களே இந்த புதிய வைபை கருவியை உருவாக்கியுள்ளனர்.
ஒரு வினாடிக்கு 100 எம்.பி என்ற வேகம் தான் தற்போது இணையதளத்தின் அதிக வேகமாக பார்க்கப்படுகிறது. தற்போது, ஈந்தோவன் பல்ககைக்கழக ஆரய்ச்சியாளர்க்ள வினாடிக்கு 40 ஜி.பி வேகத்தில் இயங்கக் கூடிய வைபையை உருவாக்கியுள்ளனர்.
இதை சோதனை செய்து பார்த்த போது 2.5 மீட்டர் தொலைவிலும் வினாடிக்கு 42 ஜி.பி என்ற வேகத்தில் இயங்கியதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இதை பல்வேறு மின்சாதனங்களிலும் பொருத்தி எளிதில் இணைய சேவைகளை நெருக்கடியின்றி விரைவாக பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஓட்டுனர்கள் இல்லாமல் இயங்கும் ரயில் அறிமுகம்!
மன்னாரில் 1400 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்த அடையாளம்: அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!
பூமிக்கு இணையான தண்ணீர் உள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
|
|