10′ இன்ச் டிஸ்பிளேயுடன் குறைந்த விலையில் மினி ஐபாட் அறிமுகப்படுத்தும் ஆப்பிள் !

Monday, February 4th, 2019

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின்நடுவில் அதன் 10′ இன்ச் ஐபாட் மினி 5 மற்றும் குறைந்த விலை ஐபாட் மாடல்களை அறிமுகம்செய்யப்போகிறது என்ற உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

2015 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபாட்4 மாடலின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது, புதிய ஆப்பிள் இன் ஐந்தாவது ஜெனெரேஷன் ஐபாட்மினி மற்றும் குறைந்த விலையில் ஐபாட் மாடல்களை உருவாகியுள்ளது அந்நிறுவனம்.10′ இன்ச் டிஸ்பிளே புதிய ஆப்பிள் ஐபாட் மினியில்,சிறப்பான கெமரா சேவை, டச் ஐடி மற்றும் உறுதியான மெலிந்த அலுமினியம் பேஸ்ஸில்ஸ் கொண்டுஉருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3டி கெமரா சோனி நிறுவனத்துடன் இணைந்துள்ள ஆப்பிள் நிறுவனம்.அடுத்த தலைமுறை 3டி கெமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐபோன் ப்ரோ மாடலை உருவாக்கிவருகிறது.

ஐபோன் ப்ரோ போன்கள் 3டி லேசர்சென்சார்களுடன் 2020 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது. iOS 13 ஆப்பிள் நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்யவுள்ளஐபோன்களில் iOS 13 இயக்கத்துடன் வெளியிட அந்நிறுவனம் செயல்முறைகளை நடைமுறைபடுத்தி வருகின்றது.

இந்த நிலையில் iOS 13 இயங்குதளத்துடன்கூடிய ஐபோன்கள் வரும் ஆண்டில் வெளியிடப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.