10 ஆண்டுகளின் பின் வரும் 9ஆம் திகதி வானில் நிகழும் அபூர்வம்!
Thursday, May 5th, 201610 ஆண்டுகளுக்கு பின்னர் சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு எதிர்வரும் 9ஆம் திகதி நிகளவுள்ளது. இதனை வெற்றும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை அன்றைய தினம் மாலை 4.15 முதல் மாலை 6.20 வரை வானில் பார்க்கலாம்.
புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும். இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது.
புதன்கோள் சூரியனை கடக்கும் நிகழ்வை வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காணலாம். இந்தியாவில் சூரியன் மறையும்போது இந்த நிகழ்வை காணமுடியும்.
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்க நாடுகளில் சூரிய உதயம் ஆகும்போது காணமுடியும்.
கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி இந்த அரிய நிகழ்வு நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்த அரிய நிகழ்வு நடக்கிறது.
ஒரு நூற்றாண்டுக்கு 8 முறைதான் புதன்கோள் சூரியனை கடந்து செல்லும். அடுத்து 2019ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி இந்த நிகழ்வை மீண்டும் காணலாம்.
அதன் பின்னர் 2032ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி தான் புதன்கோள் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
Related posts:
|
|