1.9 மில்லியன் சாம்சுங் திருப்பி அழைத்த சாம்சுங் நிறுவனம்!
Monday, October 17th, 2016
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சாம்சுங் நிறுவனம் கடந்த செப்டெம்பர் மாதம் 15ம் திகதி Galaxy Note 7 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. ஆரம்பத்தில் கைப்பேசி பிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்த இக் கைப்பேசியானது பின்னர் அவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியதை அடுத்து மதிப்பிழந்து போனது.
இதற்கு பிரதான காரணம் வெடிப்பு சம்பவங்களாக காணப்பட்டிருந்தது. அதாவது இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்ட குறுகி காலத்தில் சுமார் 96 வரையான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 26 சதவீதமானவை அக் கைப்பேசி எரிந்து வெடித்துள்ளமை தொடர்பாகவும், 55 சதவீதமானவை சேதம் ஏற்படுகின்றமை தொடர்பாகவும் இருந்தது.
இதன் காரணமாக தற்போது வரை சுமார் 1.9 மில்லியன் Galaxy Note 7 கைப்பேசிகளை சாம்சுங் நிறுவனம் மீளப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல பில்லியன் நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிய சூழல் அந் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மற்றுமொரு தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசி தொடரை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை தக்க வைத்துக்கொள்வதற்கு தாம் எத்தனிப்பதாக கொரியாவை சேர்ந்த சாம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|