08 ஆம் திகதி பூரண சந்திரகிரகணம் – கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிப்பு!

Friday, November 4th, 2022

பூரண சந்திரகிரகணம் ஒன்று எதிர்வரும் 8 ஆம் திகதி நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் ஆய்வுப் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சந்திர கிரகணத்தில் ஆசியாவின் சில பகுதிகளிலும் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பார்வையிட முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த சந்திர கிரகணம் அரைவாசியாக தென்படக்கூடும் என்றும் இலங்கை நேரப்படி பி.ப 1.30 மணிமுதல் இந்த சந்திர கிரகணம் இடம்பெறுவதுடன் 4.29 மணியளவில் முழுமையடைவதாகவும் இரவு 7.26 மணியுடன் அது நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்திரனானது கிழக்கு திசையிலிருந்து மாலை 5.48 மணியளவில் மேலெழும்புவதோடு இலங்கையர்களுக்கு இதன் இறுதிப் பகுதியை மாத்திரம் பகுதியளவு கிரகணமாக பார்வையிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திர கிரகணமானது இந்த வருடத்தின் இரண்டாவதும் இறுதியானதுமான சந்திரகிரகணமாக அமைவதுடன் மீண்டும் முழுமையாக சந்திரகிரணமொன்று 2025 மார்ச் 14 ம் திகதியே உலகில் நிகழவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

000

Related posts: