20 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் கூகுள் !

Tuesday, July 12th, 2016

ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட ஆன்டிராய்ட் தொடர்பாக இந்தியாவை சேர்ந்த 20 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த பயிற்சியை இந்த வருடமேஇ தனியார் பல்கலைகழகங்கள் மற்றும் பயிற்சி பாடசாலைகளில் நேரடியாக சென்று இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளது.

அதேபோல் மத்திய அரசின் தேசிய திறன் வளர்ச்சி கழகம் சார்பிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சி மூலம் இந்தியாவைஇ மொபைல் வளர்ச்சியில் தலைமையாளராக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில்இ இந்தியாவில் 40 இலட்சம் ஆன்டிராய்டு பயிற்சி பெற்ற மென்பொருள் பொறியாளர்கள் இருப்பார்கள் எனவும்இ அதேசமயம் அமெரிக்காவில் இந்தியர்களை காட்டிலும் 3இல் ஒரு பங்கு மென்பொருள் பொறியாளர்களே இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Related posts: