தண்ணீர் உள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

Friday, September 13th, 2019


பூமியை போன்ற தண்ணீர் உள்ள புதிய கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகம் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஹபல் தொலைநோக்கி ஊடாக கண்காணித்து அதன் மூலம் கிடைத்த தகவல்கள் ஆராயந்துஇ அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த புதிய கிரகத்திற்கு மு2-18டி என பெயரிடப்பட்டுள்ளது. இது பூமி மற்றும் நெப்தீயூன் அளவில் இருப்பதாகவும் அண்ட வெளியில் இருக்கும் நூற்றுக்கணக்கான கிரகங்களில் ஒரு கிரகமான இது அடையாளம் காணப்பட்டுள்ளது.

தண்ணீர் உள்ள இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டமை நமது சூரிய மண்டலத்திற்குள் வெளியில் உயிரினங்கள் இருப்பதற்கான சாட்சியம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: