சந்திரயான்-2 : கருவியை மாற்றி அமைக்க முயற்சி!

Thursday, September 12th, 2019


செயலிழந்துள்ள தகவல் தொடர்பை மீட்டெடுப்பதற்காக சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் என்டனோ எனும் கருவியை மாற்றி அமைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சிப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விக்ரம் லேண்டர் மற்றும் அதனுள் இணைக்கப்பட்டிருந்த பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் செயற்பாட்டுக் காலம் 14 நாட்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தகவல் தொடர்பினை மீளப் பெற்றுக்கொள்ளும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது