ஸ்மார்ட் கைக் கடிகாரங்களுக்கான புதிய இயங்குதளம்!

Monday, March 20th, 2017

ஸ்மார்ட் தொழில்நுட்பமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றதைத் தொடர்ந்து ஸ்மார்ட் கடிகாரங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

இக் கடிகாரங்கள் கூகுளின் அன்ரோயிட் மற்றும் ஆப்பிளின் iOS இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகவே காணப்படுகின்றன.இந்நிலையில் தற்போது ஸ்மார்ட் கடிகாரங்களுக்கான புதிய இயங்குதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டு வருவதாக Bloomberg இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெயரிடப்படாத குறித்த இயங்குதளத்தினை Swatch எனும் நிறுவனமே வடிவமைத்து வருகின்றது.இவ் இயங்குதளம் அன்ரோயிட் மற்றும் iOS இயங்குதளங்களுக்கு போட்டியாக இருக்கும் என Swatch நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Nick Hayek என்பவர் தெரிவித்துள்ளார்.மேலும் 2018ம் ஆண்டின் இறுதியில் இவ் இயங்குதளம் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: