“ஸ்பைடர் மேன்” என்றழைக்கப்படும் பாலஸ்தீன சிறுவன்

Tuesday, May 24th, 2016
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் முகமது அல் ஷேக், தன்னுடைய அசாதாரணமான செயற்பாடுகளால் ”ஸ்பைடர் மேன்” என்று அழைக்கப்படுகிறார்.

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இவர் தனது உடல் அவயங்களை வளைத்துக் காட்டுகிறார்.கால் பாதங்களைத் தூக்கித் தோள்களில் வைக்கிறார். உடலைப் பின்பக்கமாக வளைத்து, தலையை முன்னோக்கிக் காட்டுகிறார். இரண்டு கைகளால் நடக்கிறார். ஒரு கையால் நிற்கிறார்.

4 அடி 6 அங்குல உயரமும் 29 கிலோ எடையும் கொண்ட முகமதுக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதே தற்போதைய இலட்சியம்.

முகமதுவின் திறமை லெபனான் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.உடல் வளைப்பு போட்டியில் கலந்துகொண்ட முகமதுக்கு 1.4 கோடி வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

தனித்துவம் மிக்க 4 உடல் அசைவுகளை, இவர் போலச் செய்வதற்கு இந்த உலகில் யாரும் இல்லை என கூறப்பட்டுள்ளது.தன்னுடைய திறமைகளை கின்னஸ் சாதனைப் புத்தகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார் முகமது.

347C450200000578-0-image-a-76_1463918200005

347C455E00000578-0-image-a-84_1463918214809

311574574

(நன்றி இணையம்)

Related posts: