ஸ்கைப் செயலியின் அதிரடி மாற்றம்!

Friday, July 7th, 2017

இணைய வழித்தொடர்புகளில் ஸ்கைப் செயலி மிக அதிகப்படியாக அளவிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

இந்நிலையில்  ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கான புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட இருக்கின்றது. ஸ்கைப்பின் இந்த புதிய பதிப்பானது முற்றிலும் புதிய தோற்றத்தினை கொண்டதாக காணப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் சில புதிய வசதிகளையும் இது பெற்றுள்ளது.

அதில் ஒன்று இன்கால் ரியாக்சன்ஸ் எனப்படுகின்ற வசதியாகும். இதன் மூலமாக அழைப்பில் இருக்கும் போதே லைவ் ஈமோஜிக்கல், லைவ் டெக்ஸ்ட், ரியல் டைம் போட்டோஸ் ஆகியவற்றினை பயன்படுத்திட முடியும். குறும் செய்திகளை அனுப்பும் போது எக்ஸ்பிரசிவ் ரியாக்சன்ஸ்களை பயன்படுத்தி உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திட முடியும். அத்துடன், அன்றாட நடவடிக்கைகளை ஹைலைட் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பதிப்பினை ஐ டியூன் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Related posts: