ஸ்கைப்பிற்கு போட்டியாக அமேஷான் அறிமுகம் செய்யும் புதிய சேவை!

Friday, February 17th, 2017

உலகளாவிய ரீதியில் வீடியோ மற்றும் குரவல் வழி அழைப்புக்கள் மட்டுமன்றி குறுஞ்செய்திகள், கோப்பு பரிமாற்றம் என்பவற்றினை இலவசமாக வழங்கும் சேவையாக ஸ்கைப் காணப்படுகின்றது.

மிகவும் பிரபல்யமான இச் சேவையினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வருகின்றது.

இப்படியிருக்கையில் இச் சேவைக்கு போட்டியாக அமேஷான் நிறுவனம் Amazon Chime எனும் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது.

வியாபார நிறுவனங்களை இலக்காகக் கொண்டு வழங்கப்படவுள்ள இச் சேவையின் ஊடாக அதி உயர் தரம் கொண்ட வீடியோ மற்றும் குரல் வழி அழைப்புக்களை மேற்கொள்ள முடியும்.

மேலும் டெக்ஸ்டாப் கணினிகள், iOS மற்றும் Android சாதனங்களின் ஊடாகவும் இச் சேவையினை பயன்படுத்த முடியும்.

625.500.560.350.160.300.053.800.900.160.90-1

Related posts: