வேற்றுக்கிரகவாசிகளால் காப்பாற்றப்படும் பூமி..!
Tuesday, January 3rd, 2017
நிலவில் வேற்றுக்கிரகவாசிகளின் தளம் உள்ளது அங்கிருந்தே வேற்றுக்கிரகவாசிகள் எம்மை நோட்டமிடுகின்றார்கள் என்பது ஆய்வாளர்களின் முக்கிய கருத்து.
அந்தவகையில் நிலவு திட்டமிட்டு அமைக்கப்பட்டது என்றும் கூட விஞ்ஞானிகள் கூறுகின்றனர், அதன் காரணமாகவே மீண்டும் நிலவு நோக்கிய மனித பயணத்தை மேற்கொள்ள வில்லை என்றும் கூறப்படுகின்றது.
அப்படி என்றால் அவர்கள் பூமியில் எதிர் பார்ப்பது என்ன? உண்மையில் வேற்றுக்கிரகவாசிகள் எனப்படுகின்றவர்கள் பூமியை அழிக்க காத்திருக்கின்றார்களா?
அல்லது அவர்கள் எம்மை காத்து வருகின்றார்களா? என்பதில் இப்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதாவது முதலாம் இரண்டாம் உலக யுத்த காலத்தின் போதே பறக்கும் தட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது.
அப்போது முதல் இப்போது வரை பூமியை அவர்கள் அழிக்காமல் விட்டு விடுவார்கள் என்றால் சாத்தியம் இல்லை ஆக மொத்தம் அவர்கள் பூமியை காப்பாற்றி அல்லது எச்சரிக்கை விடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.
இவ்வாறான எச்சரிக்கைகளாகவே வேற்றுக்கிரக வாசிகளால் வரையப்படுகின்றன என நம்பப்படும் பயிர் வட்டங்கள் காணப்படுகின்றதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
இங்கு வேதனை என்னவெனில் அவ்வாறான பயிர் வட்டங்களில் கூறப்படும் செய்தி என்ன என்பது தொடர்பில் வெளிப்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் இவை பூமி முழுதும் பரவி காணப்படுகின்றது.
Drake எனும் ஆய்வாளர் கண்டுபிடித்த சமன்பாட்டின் படி எமது பால்வெளி மண்டலத்தில் மட்டும் 1,87,50,000 வேற்றுகிரகங்கள் பூமிக்கு ஒத்தவை அல்லது பூமியைப் போல் தகவல் தொடர்பு கொள்ளும் அளவு அறிவுள்ள வேற்றுக்கிரகவாசிகளை கொண்டவை என நிருவியுள்ளார்.
மேலும் இதுவரை நம்மால் காண முடிந்த பிரபஞ்சத்தில் (Observable Universe) மட்டும் 2,81,25,00,000 பில்லியன் வேற்றுக்கிரகங்கள் இதே போன்று தகவல் தொடர்பு கொள்ளும் அளவு அறிவுள்ள ஏலியன்களை கொண்டவை எனவும் கூறுகின்றார்.
இந்த Drake எனப்புடும் ஆய்வாளரின் சமன்பாட்டினை கொண்டு மிக மிக குறைந்த வாய்ப்புள்ள கணக்கீடு செய்யும் போது பூமிக்கு அருகில் 15,000 வேற்றுக்கிரகங்கள் நம்மை விட அறிவுள்ள ஏலியன்களை கொண்டது.
இதன் படி நாம் மட்டும் பிரபஞ்சத்தில் தனித்து வாழ்கின்றோம் என்பது பச்சைப் பொய் என்பது தெளிவாகும்.
இவ்வாறான கிரகங்கள் பூமியை நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கின்றன. அதற்கான ஆதாரங்களே பூமியில் அடிக்கடி தென்படும் பறக்கும் தட்டுகள் எனவும் கூறப்படுகின்றது.
ஆக மொத்தம் பூமியை தாக்க ஒரு கிரகத்தினரும், பாதுகாக்க ஒரு கிரகத்தினரும் இருப்பதாக வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு செய்பவர்கள் கூறும் வாதம் நம்பிக்கையும் கூட. என்ற போதும் இவை மறைக்கப்பட்டு கொண்டு வருகின்றது.
மாறாக பூமியை தாக்க திட்டமிட்டிருந்தால் அவர்கள் எப்போதோ பூமியை ஆக்ரமித்து கொண்டிருப்பார்கள் எனவும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர் ஆனால் ஊன் விட்டுவைத்துள்ளார்கள் என்பதே தெரிய வில்லை.
ஆனாலும் இன்னும் ஒரு தரப்பு பூமியை காத்து வருகின்ற காரணத்தினாலேயே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட வில்லை.
இந்த வகை நம்பிக்கைக்கு காரணம் பயிர் வட்டங்கள் மூலம் கிடைத்த தகவல்கள் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ஆனால் இது தொடர்பிலான உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வில்லை.
எவ்வாறாயினும் காப்பது யார்? அழிக்கப்போவது யார் என்பதை அறிந்து கொள்ளும் வகையிலேயே வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஞ்ஞானிகள் இது தொடர்பில் திணறும் காரணத்தினால் கோடிக்கணக்கான பணத்தினை அன்றாடம் வாரி இறைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது இப்போது சர்வதேசம் முன்னெடுக்கும் செயற்பாடுகளில் இருந்து தெளிவாகின்றது.
Related posts:
|
|