வெளியானது Kinxinda R7 பட்ஜெட் மொபைல்!

Sunday, June 5th, 2016

பிரபல ஷொப்பிங் இணையதளம் குறைந்த விலையுடன் கூடிய அட்டகாச வசதிகள் கொண்ட Kinxinda R7 மொபைல் போன்களை வெளியிட்டுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி நிறங்களில் கிடைக்கும் இந்த மொபைலில் விலையுர்ந்த மற்ற போன்களில் உள்ள அனைத்து வசதிளும் உள்ளன. பாக்கெட்டுகளில் எளிதில் வைத்துக் கொள்ளும் படி இதனை வடிவமைத்துள்ளனர்.

வெளிப்புறம் மெட்டலால் ஆன இந்த மொபைல் போனில் 5.5 இன்ச் பெரிய தொடுதிரை, 1.3 GHz quad-core processor உள்ளது. LED flash உடன் கூடிய 8MP பின்பக்க கமெராவும், 5MP முன்பக்க கமெராவும் உள்ளது.

மேலும், Android Lollipop 5.1 இயங்குதளத்தை கொண்டதாக இருக்கிறது. தவிர, 8GB உட்புற சேமிப்பு கொண்ட இந்த போனில் 64GB வரை சேமிப்பு பகுதியை நீடித்து கொள்ளலாம்.

அதேபோல் distance sensor, gravity sensor, T-Flash card, Wi-Fi, Bluetooth, GPS, மற்றும் FMபோன்ற பல வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் விலை இந்திய மதிப்புக்கு ரூ.4,299 மட்டுமே இருப்பது சிறப்பம்சமாக உள்ளது.

Related posts: