வெறும் கண்ணில் தெரிந்த கிரகங்கள்!

Wednesday, November 15th, 2017

வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கிரகங்களும் பூமிக்கு மிக அருகில் வெறுங்கண்களால் பார்க்க கூடிய அளவுக்கு தெளிவாக காட்சியளித்தன.

சூரியன் உதிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாக, இரண்டு பிரகாசமான பந்துகள் போல இவை காட்சியளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் சில பாகங்களுடன், இந்தியா மற்றும் இலங்கையிலும் இவை தென்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த இரண்டு கிரகங்களும் 13 மாதங்களுக்கு ஒருமுறை இவ்வாறு அருகருகே தோன்றினாலும், இந்தமுறை மிகவும் பிரகாசமாக தென்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், இவை வெறுங்கண்களில் தெரிந்தாலும், தொலைநோக்கிகளின் ஊடாக பார்க்கும் போது, வியாழன் கிரகத்தின் 4 துணைக்கோள்களையும் பார்வையிட முடியும் என்று கூறப்படுகிறது.

98712589_venusnov16-17

Related posts: