வெடித்த விண்கலம் தொடர்பில் மர்மம் !

Sunday, September 4th, 2016

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட இருந்த, விண்கலம் வெடித்து சிதறியது. இவ்வாறு ராக்கெட் வெடித்ததில் மர்மம் உள்ளதாக சந்தேகம் தற்போது வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ராக்கெட்டோடு பேஸ் புக் நிறுவனம் தயாரித்து வைத்திருந்த 200 மில்லியன் டாலர் பெறுமதிமிக்க அதி நவீன சாட்டலைட்டும் வெடித்துச் சிதறியது. இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த விண்கலம் வெடித்தது என்றே இது வரையிலும் கருதப்பட்டு வந்தது எனினும் அது தற்செயலாக நடக்கவில்லை. குறித்த விண்கலம் மேல் ஒரு மர்ம பொருள் மோதியே அது வெடித்தது என்று தற்போது சந்தேகம் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த விண்கலம் ஏவப்படும் நிலைய வளாகம் 24 மணி நேரமும் கண்காணிப்பு கமரா (CCTV) கொண்டு அவதானிக்கப்பட்டு வந்துள்ளது.

விண்கலம் வெடிப்பதற்கு சில செக்கனுக்கு முன்னர் அதன் மீது அடையாளம் காண முடியாத ஒரு மர்ம பொருள் வந்து தாக்கியுள்ளதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக கண்காணிப்பு கமரா காணொளியைப் பார்த்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தியால் பெரும் பரபரப்பும் ஆராய்ச்சியாளர்களிடம் பலத்த சந்தேகமும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நம்பகத் தன்மையினையும், ஆய்வினையும் ஆய்வாளர்கள் வேகமாக முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: