வெடித்து சிதறிய எரிமலை!

3E02E77500000578-4286570-Dramatic_footage_captured_the_terrifying_moment_tourists_screame-a-163_1488814882371 Thursday, March 16th, 2017

சுமார் 150 வருடங்களாள எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்த எரிமலை ஒன்று தற்போது வெடித்து சிதறியுள்ளது. இந்திய எல்லையை சேர்ந்த அந்தமான் தீவுகளில் இருந்து சுமார் 140 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் அமைந்துள்ள பரென் தீவு பகுதியில் பழங்கால எரிமலை ஒன்றுள்ளது.

இந்திய எல்லையில் இருக்கும் ஒரே எரிமலை இதுதான். இந்த எரிமலையை சுற்றி மக்கள் குடியிருப்பு கிடையாது. இந்த எரிமலையானது கடைசியாக 1787 ஆம் ஆண்டு வெடித்து சிதறியது.

இந்நிலையில், கடந்த 150 வருடங்களாக எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்த எரிமலை தற்போது வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலையின் சீற்றம் அதிநவீன கேமராவால் வீடியோவாக்கப்பட்டு இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இரவு நேரத்தில் படமாக்கப்பட்டதால் வீடியோவில் எரிமலை சீற்றம் பச்சை நிறத்தில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.