வீதியில் ஓடும் பறக்கும் கார் அறிமுகம்

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2) Wednesday, April 19th, 2017

நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்த ஏரோமொபில்(Aeromoble) என்னும் பறக்கும் காரானது வரும் ஏப்ரல் 20-ம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்லோவோகியா நாட்டை சேர்ந்த ஏரோமொபில்(Aeromoble) நிறுவனமானது பத்து ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு தற்போது ஏரோமொபில் என்னும் பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.

இந்த காரானது வரும் 20- ம் திகதி நடக்கவுள்ள மார்க்கஸ் மொனாக்கோ சூப்பர் கார் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவுள்ளது.

தனிபட்ட போக்குவரத்திற்கு பயன்படும் இந்த காரானது வானிலும் சாலையிலும் செலுத்த இயலும். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.

இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய இந்த காரை சாலையில் செலுத்தும்போது 310மைல்கள் வரையில் செல்லலாம். மேலும் 5 அடி நீளம் கொண்டிருக்கும்.

எடைகுறைவான ஸ்டீல் ப்ரேம் ஒர்க்(Steel Frame Work) மற்றும் கார்பன் கோட்டிங்(Carbon coating) உடன் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த பறக்கும் கார் விமானமாக மாறும் போது 26அடி அகலத்துடனும் 19 அடி நீளத்துடனும் இருக்கும்.

இந்த காரின் ஒட்டுனர் அமரும் இருக்கை விமானத்தில் அமைக்கப்பட்டிருப்பதை போன்றே இருக்கும். இந்த காரை ஓட்டுவதற்கு விமான ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது கட்டாயமாகும்.