விஷப் பரீட்சை வெற்றியளிக்குமா?

Friday, August 26th, 2016

அமெரிக்க விமானப்படையானது உலகளாவிய ரேடியோ அலவரிசை உள்வாங்கலில் மேம்படுத்தலை மேற்கொள்வதற்காக புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளது.

இதன்படி அண்டவெளியில் பிளாஸ்மா குண்டுகளை வெடிக்க வைத்து பரீட்சிப்பில் ஈடுபடவுள்ளது. இதன் ஊடாக ரேடியோ கதிர்கள் பூமியை நோக்கி எடுத்துவரப்படுதலை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கின்றனர்.

இதற்கான ஆய்வு நடவடிக்கைகளில் 3 குழுக்கள் வெவ்வேறாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றது.இதேவேளை சிறிய சென்டிமீற்றர்கள் கனவளவுள்ள பொருட்களையும் துல்லியமாக கண்டறியக்கூடிய ஊரடிநளுயவள எனும் சிறிய ரக சாட்டிலைட் ஒன்றினையும் இதற்காக பயன்படுத்தவுள்ளனர்.

இந்த சாட்டிலைட்டில் பிளாஸ்மா ஜெனரேட்டர்கள் இணைக்கப்பட்டு அவை எவ்வாறு சிதறச் செய்யப்படுகின்றன என ஆராயப்படவுள்ளது.இதேவேளை பூமியிலிருந்து 60 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் காணப்படும் அயனி மண்லத்தில் (ஐழழெளிhநசந) அயனிகளின் அளவினை அதிகரிக்கவும் செய்யவுள்ளனர்.இவ்வாறு செய்வதனால் ரேடியோ அலைகள் அதிகளவில் தெறிப்படைதலுக்கு உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: