விவசாயம் செய்ய ஆளில்லா உலங்குவானூர்தி!

Wednesday, October 12th, 2016

விவசாயத்திற்கு உதவும் ஆளில்லா ஹெலிகாப்டர் ஒன்றை யமஹா நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஜப்பானின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா தற்போது விவசாயத்தின் மீது தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

விவசாயத்திற்கு பயன்படும் ஃபேசர் ஆர் ரக ஆளில்லா ஹெலிகாப்டர் ஒன்றை இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம் ஆட்கள் உதவியின்றி 32 லிட்டர் பயிர் தெளிப்பான்கள் வரை எடுத்து சென்று பயிர்களுக்கு தெளிக்க முடியுமென்றும், நான்கு ஹெக்டேர் நிலத்திற்கு ஒரே நேரத்தில் மருந்து தெளிக்க முடியும் எனவும் யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவம்பரில் விற்பனைக்கு வர உள்ள இந்த ஹெலிகாப்டர், டோக்கியோவில் நாளை தொடங்கும் சர்வதேச விமானக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. யமஹாவின் தயாரிப்புகளில் இந்த ஹெலிகாப்டர் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

2043472708Heli

Related posts: