விரைவில் புவியீர்ப்பு விசைகள் குறித்த முக்கிய செய்தி!

Tuesday, November 14th, 2017

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆய்வு நிறுவனங்கள் புவியீர்ப்பு விசைகள் பற்றிய ஆராய்ச்சிகள் குறித்தான முக்கியமான அறிவிப்புகளை விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளன.

வோஷிங்டனில் இயங்கும், தேசிய விஞ்ஞான அமைப்பின் அறிக்கையின் பிரகாரம், எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி இந்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உலகம் முழுவதும் ஆய்வுகளில் ஈடுபட்ட 70 விஞ்ஞானிகள் இந்த நிகழ்வில் பங்கேற்று தமது ஆய்வு முடிவுகளை வெளியிடவுள்ளனர்.

வோஷிங்டனில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு சர்வதேச ரீதியில் இயங்கும் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புவியீர்ப்பு விசைகளில் மாற்றங்கள் நிகழும்போது, இயற்கை மற்றும் உயிரினங்களின் வாழ்க்கையிலும் அது தாக்கத்தைச் செலுத்தக் கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் குறித்த நிகழ்வில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related posts: