வியாழன் கிரகத்தில் புயல்: ஆராய்கிறது ஜுனோ விண்கலம்!

red-spot-1 Thursday, July 13th, 2017

வியாழன் கிரகத்தின் மிகவும் அறியப்பட்ட `தி கிரேட் ரெட் ஸ்பாட்` என்ற பகுதியின் அமைப்பு மற்றும் தோற்றத்தை பற்றி ஆராய்வதற்காக , அதன் மேற்பகுதியில் நாசாவின் ஆளில்லா விண்கலம் ஒன்று பறந்து வருகிறது.

`ஜுனோ` என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா ஆய்வு விண்கலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான பெரிய புயலான அந்த பெரும் சிவப்புப் பகுதி குறித்த நெருக்கமான தரவுகளை சேகரிப்பதற்காக வியாழனுக்கு மேல் 9,000 கிலோ மீட்டர் உயரத்தில் பயணித்து வருகிறது.

அப்பகுதியில் மேகங்களின் கட்டமைப்பு மற்றும் அவற்றின் கீழே என்ன இருக்கிறது என்பது குறித்து சோதிக்கவும், இந்தப் புயல் வளிமண்டலத்தின் ஆழத்தில் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் விரும்புகின்றனர்.

ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை வந்தடைந்து 12 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை விட, இந்த கிரகத்தின் காந்தப்புலம் அதிக பலத்துடன் இருப்பதையும் ஏற்கனவே இந்த விண்கலம் கண்டறிந்துள்ளது.


ஒளிவேக இன்டர்நெட்!
திருமணம் முடிக்க பெண்கள் இல்லாத கிராமம்: பிரம்மசாரிகளாகவே வாழும்  ஆண்கள்!
கலக்ஸி நோட் 7 கைபேசி திரும்பப் பெறப்படுவதால் சுமார் மூன்று பில்லியன் டாலர்களை இழக்கும் சாம்சங்!
கட்டுக்குள் வராவிட்டால் பல நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம்!
முதலாவது முழுநேர ஆளில்லா விமான பொலிஸ் பிரிவு ஆரம்பம்!