வியாழனை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!
Thursday, November 16th, 2017
வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பிரம்மாண்டமான புதிய கிரகத்தை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
விண்வெளியில் பல்வேறு புதிய கிரகங்கள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் விண்கல் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பிரம்மாண்டமான புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது, இது வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரியது.
அதற்கு ‘ஒ.ஜி.எல்.இ- 2016-பி.எல்.ஜி-1190 எல்.பி.’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கிரகத்தை ‘ஸ்பிட்சர்’ விண்வெளி டெலஸ்கோப் மூலம் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 22,000 ஒளி தூரத்தில் உள்ளது, இதற்கு துணைக்கிரகம் எதுவும் உள்ளதா என கண்டறியப்படவில்லை.
Related posts:
டிசம்பர் இறுதியோடு வாட்ஸ்அப் இல்லையாம்..!!
சாதனை படைத்தது Netflix நிறுவனம்!
முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட பேஸ்புக் தரவுகள் குறித்து விசாரணை!
|
|