வினோத சுவை கொண்ட புல் இனம் கண்டுபிடிப்பு!

Thursday, November 16th, 2017

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிராத புதிய வகை புல் இனம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இப் புல்லினமானது உப்பு மற்றும் வினாகிரி சுவை தரக்கூடிய சிப்ஸ் போன்ற சுவையினை தரக்கூடியதாக இருப்பது ஆச்சரியமூட்டுவதாக காணப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இப் புல்லினம் வேறு நாடுகளில் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Western Australia பல்கலைக்கழகத்தினை சேர்ந்த விஞ்ஞானிகளே இப் புல்வகையினை கண்டுபிடித்துள்ளனர்.இது Triodia இனத்தைச் சேர்ந்த புல்லாக இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். Triodia இனத்தில் இதுவரை சுமார் 64 வகையான புற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Related posts: