விண்வெளியில் சாதனை படைத்த பிரான்ஸ் வீரர்!

Monday, January 16th, 2017

 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Thomas Pesquet (38) மற்றும் அமெரிக்காவை சேர்ந்த Shane Kimbrough (49) என்ற விண்வெளி வீரர்கள் முக்கிய விடயத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு வந்திருக்கிறார்கள்.

அதாவது, சர்வதேச விண்வெளி நிலையத்தின் Power System- அதிகப்படுத்த ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அங்கு சென்று அதன் பேட்டரிகளை மாற்ற வேண்டியது அவசியமாகும்.

அதன் படி 194 கிலோ எடைகள் கொண்ட லித்தியம் அயன் பேட்டரிகள் மூன்றை Thomas மற்றும் Shane வெற்றிகரமாக மாற்றியுள்ளனர். இதை இருவரும் 3 மணி நேரத்தில் செய்து முடித்துள்ளார்கள்.

விண்வெளியில் முதன்முறையாக நடந்து Thomas Pesquet சாதனை படைத்துள்ளார், Shane Kimbrough-க்கு இது நான்காவது நடைபயணமாகும். மொத்தம் 48 பேட்டரிகள் அங்கு உள்ளது, ஒன்றன் பின் ஒன்றாக எல்லாமே மாற்றப்பட வேண்டியது கட்டாயமாகும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (4)

Related posts: