வாய்ப்புற்று நோயினால் நாளொன்றுக்கு 3 மரணங்கள் !

J77h0E9 Friday, February 9th, 2018

வாய்ப்புற்று நோய் காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு மூன்று பேர் மரணிப்பதாக வாய்ப்புற்றுநோய் மற்றும் முகம் தொடர்பான விசேட வைத்திய சங்கம் தகவல்வெளியிட்டுள்ளது.வருடத்தில் வாய்ப்புற்றுநோய் தாக்கத்தினால் 2 ஆயிரத்து 500 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவரான பற்சிகிச்சை நிபுணர்ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்த நோய் தாக்கத்துக்கு அதிகமாக உட்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,புகையிலை மற்றும் புகைத்தலை புறக்கணித்து, வாய்ப்புற்றுநோயிலிருந்து விடுபடுவோம் என்பதே இன்றைய தொனிப்பொருளாக அமைந்துள்ளது என்று பற்சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.