வானில் இன்று அபூர்வ நிகழ்வு!

Wednesday, January 31st, 2018

இலங்கையில் 1866ம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக முழு வட்ட சந்திரனையும் பூரண சந்திர கிரகணத்தையும் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய நிகழ்வு இந்தியா மத்தியக் கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முழு கிரகணமாக தெரியும் எனவும் அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகியநாடுகளில் தொடக்கம் முதல் முடிவு வரை கிரகணத்தை காணக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இதனை பிற வடக்கு மற்றும் மத்தியஅமெரிக்காவில் முழுமையாக பார்க்க முடியாது.

இந்த கிரகணம் பிற்பகல் 4.21 ற்கு தென்படும். பூரண சந்திர கிரகணம் மாலை 6.22 முதல் 7.38 வரை தென்படும். இரவு 7.31 முதல் 8.41 வரை பாதியளவில் சந்திரன்தென்படவுள்ளது. இரவு 9.31 ற்கு சந்திர கிரகணம் முடிவடையும்.

இதுதொடர்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சந்தன ஜயரட்ன தெரிவிக்கையில் நீல நிலவு என்றழைக்கப்படும் இந்த சந்திரனைஎந்த தடங்கலும் இன்றி முழுமையாக இலங்கையிலுள்ளவர்கள் காணக் கிடைக்கின்றமை சிறப்பம்சமாகும்.

மேலும் அனைத்து போயா தினங்களை விடவும் 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் வெளிச்சமாகவும் இந்த சந்திரன் தென்படும். சந்திரன் பூமிக்கு நெருக்கமாகசுழலுகின்றமையே இதற்கான காரணம் என பணிப்பாளர் சந்தன ஜயரட்ன குறிப்பிட்டார்.

Related posts: