வாட்ஸ்அப் ஐஃபோன்களுக்கு புதிய வசதி!
Friday, July 7th, 2017
இரவிலும் தெளிவாக புகைப்படம் எடுக்கும் வகையில் ஐஃபோன்களுக்கு புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக முழுவதும் சுமார் 1.2 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்காக, அவ்வப்போது பல்வேறு புதிய அம்சங்களை பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.புதிய எமோஜியை அறிமுகப்படுத்தி பயனாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இருப்பினும் இவை இன்னும் புதிய வடிவில் கொடுக்க வாட்ஸ்அப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன்படி, தற்போது கேமராக்களிலும் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. முன்னதாக பயனாளர்கள் வாட்ஸ்அப் கேமரா சரியாக இல்லை. அதாவது இரவு நேரங்களில் எடுக்கும் புகைப்படங்கள் தெளிவாக இல்லை என்ற புகார் வந்ததை அடுத்து தற்போது அதற்கு ‘Night Mode’ என்ற புதிய ஆப்சனை அறிமுகம் செய்துள்ளது.இந்த ஆப் மூலம் இரவு நேரங்களில் புகைப்படம் எடுத்தாலும் அவை பிரகாசமாக காட்சி அளிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆப் பயன்படுத்தி புகைப்படம் மட்டும் தான் எடுக்க முடியும். வீடியோக்களை எடுக்க முடியாது. இந்த ஆப் முதற்கட்டமாக ஐஃபோன்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Related posts:
|
|