வரும் 23 ஆம் திகதி இந்த வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம்!

இந்த வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் எதிர்வரும் 23ஆம் திகதி நிகழவுள்ளதாகவும் எதிர்வரும் 23ஆம் திகதி பிற்பகல் 03.09இலிருந்து இரவு7.24 வரை இதனை பார்வையிட முடியும் என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிழக்கு வான்பரப்பில் இதனை அவதானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்திரகிரகணம் தோன்றும் திசைகளில் குறைந்தளவு பிரகாசம் காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த வருடத்தின் அடுத்த சந்திர கிரகணம் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி நள்ளிரவில் நிகழும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பூமியை போன்று புதிதாக 7 கோள்கள் உள்ளதாக நாசா அறிவிப்பு!
கோழிகளின் வாசனையை நுளம்புகள் விரும்புவதில்லை - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
மனித உடலில் இருந்து மின்சாரம்: மற்றுமொரு துணைச்சாதனம் உருவாக்கம்!
|
|