வருகிறது ZTE Blade A2 ஸ்மார்ட் மொபைல்!

Thursday, June 9th, 2016

ZTE நிறுவனம் ZTE Blade A2 என்ற புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய Blade A1 ஸ்மார்ட் மொபைல் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் Blade A2 என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மொபைல் 5 இன்ஞ் பெரிய HD தொடுதிரையை resolution 1280 x 720pixels உடன் கொண்டுள்ளது.

இதில் MediaTek MT6750 processor மற்றும் 2GB of RAM ஆகியவை உள்ளன. சேமிப்பகம் 16GB கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் microSD card slot மூலம் சேமிப்பு பகுதியை நீடித்துக் கொள்ளலாம்.

செல்ஃபி எடுத்துக் கொள்ள ஏதுவாக முன்பக்க கமெரா 5 megapixel மற்றும் பின் பக்க கமெரா 13 megapixel கொடுக்கப்பட்டுள்ளது.

சார்ஜ் நீண்ட நேரம் நிலைத்து நிற்க 2500 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. dual SIM card வசதியும் கொண்ட இந்த மொபைலில் Android 5.1 Lollipop இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் யூன் 15ம் திகதி விற்பனைக்கு வரும் இந்த புதிய ZTEBlade A2 மொபைல் 105 டொலருக்கு சந்தைகளில் கிடைக்கும்.

Related posts: