வருகிறது iPhone 8 !!

Saturday, May 21st, 2016

அப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தனது புதிய கைப்பேசிகளான iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்யவுள்ளமை தெரிந்ததே.

எனினும் இக் கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் உத்தியோகபூர்வமாகவோ அல்லது முழுமையாகவோ வெளியிடப்படவில்லை.

இவ்வாறான நிலையில் 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ள iPhone 8 கைப்பேசி தொடர்பான செய்திகள் தற்போது இணையத்தளங்களில் உலாவருகின்றன.

இக் கைப்பேசியினை அப்பிள் நிறுவனம் பாரிய மாற்றத்தினை உள்ளடக்கியதாக வடிவமைக்கும் என அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதானமாக வளைந்த (Edge) OLED திரைகளை உடையதாகவும், ஹோம் பொத்தான் (Home Button) நீக்கப்பட்டதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்குமாம்.

இதில் வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

Related posts: