வருகின்றது  Oppo A57 ஸமார்ட் கைப்பேசி!

Sunday, February 5th, 2017

கமெராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து வரும் நிறுவனமாக Oppo விளங்குகின்றது.

இந்நிறுவனம் தற்போது Oppo A57 எனும் புதிய கைப்பேசியினை இந்தியாவில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

5.2 அங்குல அளவுடையதும், 720 Pixel Resolution உடையதுமான திரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியானது 1.4GHz வேகத்தில் செயல்படக்கூடிய Snapdragon 435 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் Android 6.0 Marshmallow இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 13 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, நீடித்து உழைக்கக்கூடிய 2,900 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் பெறுமதியானது இந்திய ரூபாயில் 14,990 ஆகவும், அமெரிக்க டொலர்களில் 220 ஆகவும் காணப்படுகின்றது.

1126201611239PM_635_oppo_a57_gold

Related posts: