வருகின்றது பிளாக்பெர்ரியின் மிகவும் பாதுகாப்பான கைபேசி!

Thursday, July 28th, 2016

பிளாக்பெர்ரி நிறுவனம் உலக அளவில் மிகப் பிரபலமான மொபைல் நிறுவனம். அதன் பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் அதன் சிறப்பம்சங்களில் ஒன்று.

சில வருடங்களுக்கு முன்னர் வரை சந்தையில் முன்னணியில் இருந்தது. ஆனால் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதள போட்டியால், இந்நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது.

போட்டியை சமாளிக்க கடந்த வருடம் Blackberry PRIV எனும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இன்று மற்றுமொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Black Berry DTEK50 என்று பெயரிடப்பட்டுள்ள இது “உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது” என்று பிளாக்பெர்ரி நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெலோவ் இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய இது 5.2″  full HD அங்குல திரையும் 8 மெகா பிக்சல் முன்புறம் மற்றும் 13  மெகா பிக்சல் பின்புற கேமரா, 64-bit Qualcomm Snapdragon 617 Octa-Core பிராஸசர்,16 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 3 ஜிபி ரேம் மற்றும் 2610 mAh பேட்டரியும் கொண்டுள்ளது. இதன் நினைவுத் திறனை 2TB வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை 299 அமெரிக்க டாலராக  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 21000 ஆகும்.

ஆகஸ்ட் 8 ம் தேதியிலிருந்து விற்பனை தொடங்கும், என அதிகாரப்பூர்வ தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. எனினும் இது இந்தியாவில் விற்பனைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

Related posts: