வருகின்றது குறைந்த டேட்டாவில் செயல்படும் டுவிட்டர் அப்பிளிக்கேஷன்!

Tuesday, April 11th, 2017

பிரபல சமூகவலைத்தளங்களை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது அவற்றில் பதிவேற்றப்படும் வீடியோக்களால் அதிக டேட்டா தேவைப்படும்.

இப் பிரச்சினையை தீர்ப்பதற்காக பேஸ்புக்கிற்கு Facebook Lite எனும் அப்பிளிக்கேஷன் வெளியிடப்பட்டிருந்தது. இந்த அப்பிளிக்கேஷன் குறைந்த டேட்டாவினைப் பயன்படுத்துவதுடன், குறைந்த சிக்னலிலும் விரைவாக செயற்படக்கூடியதாகவும் இருக்கின்றது.

இந்நிலையில் டுவிட்டரினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்காக Twitter Lite எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்பிளிக்கேஷனும் வேகம் குறைந்த இணைய வலையமைப்பில் சிறப்பாக செயற்படுவதுடன், டேட்டாவினை சேமிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.இதற்காக விசேட பட்டன் ஒன்று தரப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்த பின்னர் பயன்படுத்தும்போது டேட்டா குறைவாக பயன்படுத்தப்படுகின்றது.

Related posts: