வட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

Tuesday, May 23rd, 2023

வட்ஸ்அப் பயனர்களின் நலன் கருதி வட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

வட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பப்படும் அல்லது எழுத்துப் பிழையுடன் அனுப்பப்படும் தகவல்களை இனி அழிக்க தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாறுதலாக பயனர்கள் அந்த பதிவினை(தகவலை) 15 நிமிடங்களுக்குள் திருத்தம் செய்வதற்கான முறைமையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வட்ஸ்அப்பினை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வட்ஸ்அப் பயனர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: