வட்சப் மூலம் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது!

Saturday, February 24th, 2018

வட்சப் சமுகவலைத்தளத்தின் ஊடாக இலங்கை, இந்தியாஆகிய நாடுகளை மையப்படுத்தி சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவந்த குழு ஒன்று இந்திய புலனாய்வுப் பிரிவினரால்பிடிபட்டுள்ளது.

இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள கன்னோஜ் பகுதியில் வைத்து குறித்த குழுவின் தலைவர் கைதாகியுள்ளார்.  அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுவர் துஸ்பிரயோகம்தொடர்பான காணொளிகளை பரப்புவதற்காக அவர் வட்சப் குழுவை நடத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சீ.பி.ஐ இந்த குழுவிலுள்ள இலங்கையர்கள் பற்றி இலங்கையின் விசாரணை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

Related posts: