லேசர் சாட்டிலைடை விண்ணிற்கு அனுப்பும் நாசா!

Monday, August 27th, 2018

நாசா நிறுவனம் அடுத்த மாதமளவில் லேசர் சாட்டிலைட் ஒன்றினை விண்ணில் செலுத்தவுள்ளது. ICESat-2 எனும் குறித்த சாட்டிலைட் ஆனது விண்ணில் இருந்து பூமியில் உள்ள பனிபடர்ந்த பிரதேசங்களை கண்காணிக்கும்.

இதன் ஊடாக பனிப்படலங்கள் என்ன காரணங்களினால் விரைவாக உருகுகின்றன என்பதை கண்டறிய முடியும் என நம்பப்படுகின்றது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதி கலிபோர்னியாவில் உள்ள வென்டென்பேர்க் விமானப்படைத்தளத்திலிருந்து இச் சாட்டிலைட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

மேலும் ஒவ்வொரு செக்கனிற்கும் சுமார் 60,000 அளவீடுகளை எடுக்கும் திறன் இச் சாட்டிலைட்டிற்கு இருக்கின்றமை விசேட அம்சமாகும். அண்மைக்காலமாக பனிப்பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதுடன் கடல் நீர் மட்டமும் அதிகரித்துச் செல்கின்றது. இதன் காரணமாகவே இவ்வாறானதொரு நடவடிக்கையில் நாசா நிறுவனம் இறங்கியுள்ளது.