ரயில் ஓட்டுநரின் குழப்பத்தால் அவமானப்பட்ட ஜப்பான் நிறுவனம்!

Saturday, September 17th, 2016

புகையிரதம் சரியான நேரத்தில் ஓட்டிச் செல்வதை உறுதி செய்யும் வகையில் மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்த ஓட்டுநரின் செயல்களுக்காக ஜப்பானிய புகையிரதம் நிறுவனம் மன்னிப்பு கொரியுள்ளது.

புகையிரதம் தாமதமாக செல்வது பற்றி மிகவும் கவலைப்பட்ட அந்த ஓட்டுநர் கழிவறை செல்லுவதற்கு கூட நேரமில்லை என நினைத்தார். கழிவறைக்கு செல்வதற்கு பதிலாக ஓட்டுநர் அறையின் கதவை திறந்த அவர் தண்டவாளத்தின் மீது சிறுநீர் கழித்தார்.

டோக்கியோ புறநகர் பகுதியில் புகையிரதம் நிலையத்தில் காத்திருந்த பல பயணிகள் அந்தக் காட்சியைக் கண்டார்கள். அதைத் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.

இந்த மாதத்தில் முன்னதாக, டேஷ்போர்டு எனப்படும் ஓட்டுநருக்கு முன்னர் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் பகுதிக்கு மேல் காலை வைத்து கொண்டு ஒரு ஓட்டுநர் ரயில் ஓட்டுகின்ற புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னர், புல்லட் ரயில் எனப்படும் அதிவேக ரயிலை ஓட்டுகின்ற நிறுவனமானது மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

_91279483_e6075933-61ac-42b8-93b9-af63a263a4b8

Related posts: