யூடியூப் விளம்பர சேவையில் கூகுள் செய்யும் மாற்றம்!
Thursday, March 23rd, 2017கூகுளின் பங்குதாரராக இணைந்து செயற்படும் யூடியூப்பின் ஊடாக விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவது தெரிந்ததே. இதனால் வீடியோ தரவேற்றம் செய்பவர்கள் வருவாய் ஈட்டக்கூடியதாகக் காணப்படுகின்றது. அத்துடன் பல முன்னணி நிறுவனங்கள் தமது விளம்பரங்களை காட்சிப்படுத்தியும் வருகின்றன.
எனினும் அண்மைக் காலமாக சில பிரதானமான நிறுவனங்கள் தமது விளம்பரங்களை காட்சிப்படுத்துவதை தவிர்த்து விட்டது. இதன் காரணமாக கூகுள் நிறுவனம் யூடியூப் விளம்பர சேவையில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. தீவிரவாத மற்றும் யூத எதிர்ப்பு வீடியோக்களிலும் தமது விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதனாலேயே இந்த முடிவினை பிரபல நிறுவனங்கள் எடுத்துள்ளன. இவற்றுள் ஐக்கிய ராச்சிய அரசும். கார்டியன் செய்திச் சேவையும் முதன்மையாக தமது விளம்பரங்களை தவிர்த்துள்ளன.
எனவே இவற்றின் நன்மதிப்பினை மீளப்பெறும்பொருட்டு கூகுள் நிறுவனம் எவ்வகையான வீடியோக்களில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படலாம் என்பது தொடர்பில் விரைவில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
|
|