யாழ். மாவட்டத்தில் 860 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் வாழைச் செய்கை!

03-banana-tree-600 Wednesday, May 16th, 2018

யாழ் மாவட்டத்தில் சுமார் எண்ணூற்றி 60 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் வாழைச் செய்கையாளர்கள் வாழைச் செய்கையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தூர், உரும்பிராய், உடுவில் ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலேயே கூடுதலாக செய்கையாளர்கள் இந்த வாழை செய்கையில் ஈடுபட்டும் வருகின்றனர்.

தற்போதைய பருவகாலத்தின்போது அனேகமான செய்கையாளர்கள் இந்த வாழைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் கூடுதலானோர் கதலி, இதரை செய்கையிலேயே ஈடுபட்டு உள்ளனர்.

அத்துடன் புதிய இன வாழை செய்கை அறிமுகப்படுத்தப்பட்டு அந்த செய்கையை ஊக்குவிக்கும் விவசாயத் திணைக்களம் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.