மொபைல் டேட்டாவை சேமிக்க கூகுள் புதிய திட்டம்!

Sunday, December 24th, 2017

கூகுள் நிறுவனம் இப்போது புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த செயலிப் பொறுத்தவரை பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும், பயனர்களுக்கு டேட்டாவை சேமிக்க கூகுள் நிறுவனம் டேட்டாலி

(Google Datally) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள டேட்டாலி என்ற புதிய செயலி இப்போது ப்ளே ஸ்டோரில் கிடைக்க தொடங்கியுள்ளது. மேலும் இந்த செயலி மொபைலில் பயன்படுத்தப்படும் டேட்டாவை சேமிக்கும், அதன்பின்பு அருகில் பொது வைபை கிடைத்தால் அதைத் தெரியப்படுத்தும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டேட்டாலி என்ற புதிய செயலியை பிலிப்பைன்ஸ் நாட்டில் வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம், மேலும் இந்த செயலி பொதுவாக 30சதவீத டேட்டாவை சேமிக்கப் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டேட்டாலி செயலியில் ஸ்பீடோமீட்டர் வசதி இருப்பதால் எந்த இடத்திலும் இன்டர்நெட் ஸ்பீடை அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது, மேலும் தேவையற்ற அப்ளிகேஷன் பேக் கிரவுண்டில் செயல்படுவதைத் தடுக்கிறது. இதனால் டேட்டா சேமிக்கப்படுகிறது.

டேட்டாலி செயலி பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 5.0 வெர்சனுக்கு மேல் உள்ள அனைத்து இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூகுள் ஸ்டோரில் இருந்து மிக எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

Related posts: