மூளையில் புதிய கலங்கள்!

மனிதனின் மூளையில் வாழ்நாள் முழுவதும் புதிய கலங்கள் உருவாகுவதாக மூளை பற்றிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒருவர் பிறக்கும்போது மூளையில் இருக்கும் கலங்களே வாழ்நாள் முழுவதும் மாறாமல் தொடரும் என கருதப்பட்டு, இது பற்றி தீவிர விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
ஆனால், நாம் வயது முதிர்கையில் கணிசமான அளவு புதிய மூளைக் கலங்கள் உருவாவதை ஸ்பெயினின் மட்றிட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இது டிமென்ஷியா போன்ற நோய்களுக்கு புதிய மருந்து வகைகளைக் கண்டு பிடிக்க உதவும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.
Related posts:
வருகின்றது உதடுகளின் அசைவினூடாக பேசுவதை இனங்காணும் புதிய தொழில்நுட்பம் !
நட்சத்திர வெடிப்புகளால் பூமியில் கதிரியக்க பாதிப்பு!
சென்னை அருகே 30 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்த இடம்!
|
|