மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் பேஸ்புக்!

Monday, February 4th, 2019

பிரபல சமூகவலைத்தளத்தினை அடிப்படையாகக் கொண்டு பல மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்த அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்துவதற்கு பேஸ்புக்கின் ஊடாக லாக்கின் செய்ய வேண்டும்.

இதன்போது பயனர்களின் தகவல்கள் அவர்களின் அனுமதியின்றி சேகரிக்கப்படுவதோடு அவை தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

பிரதானமாக அரசியல் விளம்பரங்களுக்காக இவ்வாறான அப்பிளிக்கேஷன்களின் ஊடாக தனிநபர் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

இதனைக் கருத்தில்கொண்டு தற்போது இவ்வாறான மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்களை பேஸ்புக்கில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.