சமூக வலைத்தளங்களுக்கு வரி: அதிர்ச்சியில் பயனர்கள்!

உலகளவில் சமூக வலைத்தளங்களின் பாவனையானது மிகவும் உச்ச நிலையில் காணப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில் உகண்டா நாட்டில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பயனர்களிடமிருந்து வரி அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
இதன்படி முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் மற்றும் டுவிட்டர் என்பவற்றினைப் பயன்படுத்துபவர்கள் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜுலை முதலாம் திகதியிலிருந்து இந்த வரி அறவிடும் முறை நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உலகின் பழமையான படிமங்கள் கிரீன்லாந்தில் கண்டுபிடிப்பு!
அதிரடி வசதியுடன் வாட்ஸ் ஆப்!
HIV எதிர்ப்பு ஆராய்ச்சிக்கு உதவும் பசுக்கள்!
|
|