மின்கலத்தில் இயங்கக்கூடிய அதிநவீன சொகுசுக் கார் அறிமுகம்!

Friday, December 16th, 2016

லூசிட் மோட்டார்ஸ் நிறுவனம், மின்கலத்தில் இயங்கக்கூடிய அதிநவீன சொகுசுக் காரை அறிமுகம் செய்துள்ளது.

செடான் ரகத்தைச் சேர்ந்த இந்த காரின் விலை ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களாகும். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் இதனை லூசிட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

100 கிலோ வோட் திறன் கொண்ட பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. 130 கிலோ வோட் பேட்டரியும் பொருத்தத் திட்டமிட்டுள்ளதாக லூசிட் கூறியுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலமாக, 400 மைல் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 600 முதல் 1000 குதிரைத்திறன் கொண்டதாக இந்த கார் இருக்கும்.

2.5 நொடிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் என்ற வேகத்தை எட்டக்கூடிய சிறப்பம்சம் கொண்ட உலகின் முதல் பேட்டரி கார் இது எனவும் லூசிட் மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த காருக்கான பேட்டரியை சாம்சங் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

car-1