மாயமான பீலியா இயந்திரம் கண்டுபிடிப்பு!

Wednesday, September 7th, 2016

வால் நட்சத்திரத்தில் காணாமல்போன பீலியா ஆய்வு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.67பீ சுரியூமொவ் – கெராசிமென்கோ அழுக்கு பனிக்கட்டியை வலம் வரும் ரொசெட்டா விண்கலம் பூமிக்கு அனுப்பி இருக்கும் புதிய படங்களை தரவிறக்கியபோது அதில், அந்த சிறிய ஆய்வு இயந்திரம் இருப்பது தென்பட்டுள்ளது.

ஆய்வு இயந்திரத்தை அடையாளம் காண்பதில் எந்த சிக்கலும் இருக்கவில்லை என்று அதனை அனுப்பிய ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அறிவித்துள்ளது. “அது பகல் பொழுதில் காண்பது போல் தெளிவாக தென்பட்டது” என்று அந்த அறிவிப்பு குறிப்பிடுகிறது.

ரொசெட்டா விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட பீலியா இயந்திரம் 2014ஆம் ஆண்டு வால் நட்சத்திரத்தில் தரையிறக்கப்பட்டது. எனினும் தரையிறங்கி 60 மணி நேரத்தின் பின் அதன் மின்கலன் செயலிழந்ததை அடுத்து ஆய்வு இயந்திரம் உறக்க நிலைக்குச் சென்றது.

எனினும் பீலியா இருக்கும் இடத்தை கண்டறிய பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை கடந்த காலங்களில் முயன்றபோதும் அது மர்மமாகவே இருந்து வந்தது. பீலியா இயந்திரம் ஓர் இருண்ட பள்ளத்தில் சிக்கியிருப்பதாக கணிக்கப்பட்டது. இந்நிலையில் ரொசெட்டாவில் இருந்து பெறப்பட்ட அதிக தெளிவு கொண்ட படங்களில், பீலியா இயந்திரம் வால் நட்சத்திரத்தின் ஒரு குறுகலான பகுதியில் சிக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆய்வு இயந்திரத்தை மீண்டும் புத்தியிர் பெறச்செய்யும் நம்பிக்கையை ஆய்வாளர்கள் கைவிட்டுள்ளனர். அதன் சில உபகரணங்கள் விண்வெளியின் குளிரால் உடைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. வால் நட்சத்திரத்தை வலம்வரும் ரொசெட்டா விண்கலம் சில வாரங்களில் அந்த வால் நட்சத்திரத்தில் மோதி தனது ஆய்வுகளை முடித்துக்கொள்ளவிருக்கும் நிலையிலேயே பீலியா இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ரொசெட்ட விண்கலம் 10 ஆண்டுகளில் 4 பில்லியன் தூரம் விண்வெளியில் பயணித்தே 67பீ வால் நட்சத்திரத்தை அடைந்தது.

coltkn-09-07-fr-01164612843_4726796_06092016_mss_cmy

Related posts: