மர்ம சமிக்ஞை வரும் இடம் கண்டுபிடிப்பு!

Friday, January 6th, 2017

கடந்த ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட அண்டவெளியில் இருந்து வரும் மர்ம ரேடியோ அலை, ஒரு துல்லியமான மூலத்தைக் கொண்டது என்று வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நியூ மெக்சிகோவில் உள்ள தொலைநோக்கி 2016 ஆம் ஆண்டு பெற்ற விரைவு ரேடியோ வெடிப்புகள், பூமியில் இருந்து மூன்று பில்லியன் ஒளியாண்டு தொலைவில் உள்ள ஒரு குள்ள பால்மண்டலத்தில் இருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விரைவு ரேடியோ வெடிப்புகள் ஒரு மைக்ரோ நொடிக்கே வெளிப்படும் என்றபோதும் அது சூரியன் 10,000 ஆண்டுகளுக்கு வெளிப்படுத்தும் சக்தியை ஒரு மில்லிநொடியில் வெளிப்படுத்தக்கூடியதாகும்.

அதிக ஆற்றல் கொண்ட இந்த ரேடியோ அலைகள் எதனால் ஏற்படுகின்றது என்பது பற்றி தொடர்ந்து விவாதம் இடம்பெற்று வருகிறது. இது வேற்றுக்கிரகவாசிகளின் சமிக்ஞையாக இருக்கக்கூடும் என்ற கோட்பாடும் வானியலாளர்கள் மத்தியில் உள்ளது.விரைவு ரேடியோ வெடிப்புகள் 2007 ஆம் ஆண்டிலேயே ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் முதல்முறை கேட்டுள்ளது.

coltkn-01-06-fr-01161506781_5120668_05012017_MSS_CMY

Related posts: