மனித மூளையைக் கொண்டு கணனியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் திருப்பம்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 Wednesday, May 10th, 2017

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு மனித மூளையிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞைகளுக்கு ஏற்ப கணினியை இயங்க வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Brain-Computer Interface (BCI) என அடையாளம் காணப்படும் இத்தொழில்நுட்பம் தொடர்பில் கடந்த 50 ஆண்டு காலமாக உலகிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறிருக்கையில் Elon Musk மற்றும் Bryan Johnson ஆகிய இருவரும் தாம் இந்த தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.இது தொடர்பான வீடியோ ஒன்றினையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் சமிக்ஞையின் ஊடாக பொருட்களை இயக்கும் தன்மை குரங்குகளிடம் காணப்படுகின்றன.அதாவது தமது மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகளை விரிவாக்கம் செய்து அதன் ஊடாக ஊசி ஒன்றினை குரங்குகளால் அசைக்க முடியும். இதே போன்ற செயற்பாட்டினை மனிதர்களில் உண்டாக்குவதன் ஊடாக கணனிகளையும் கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.